தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி

 
வெடிகுண்டு

தேர்வுக்கு படிக்காததால் பாட்டியின் செல்போனில் இருந்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவியால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவி… காரணத்தை கேட்டு ஆடிப்போன  போலீசார் ; இப்படியெல்லாமா யோசிப்பாங்க..!! - Update News 360

காட்பாடி அடுத்த திருநகர் பகுதியில் உள்ளது தனியார் பி.எம்.டி ஜெயின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னையில் உள்ள தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து சென்னை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் என்னை வைத்து விசாரணை மேற்கொண்டதில் அந்த எண் வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளலார் திரு, ஓல்டு டவுனில் காண்பித்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில். இப்பகுதியை சேர்ந்த மாணவி கழிஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்து வருவதும். நாளை நடைபெறவிருக்கும் புவியியல் தேர்வுக்கு படிக்காத காரணத்தால் தேர்வு பயத்தில் அவருடைய பாட்டியின் கைபேசியை எடுத்து அவசர எண் 100க்கு அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் வேலூர் மாவட்ட காவல் குழுவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்யும் குழுவினர் விரைந்து சென்று தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.