மதிய உணவருந்தி கொண்டிருந்தபோதே பறிபோன மாணவன் உயிர்! அதிமுகவே காரணம்... வெளியான பகீர் உண்மை

 
ச் ச்

திருத்தணி அருகே அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அரசு பள்ளியின் சாய்தள தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அடுத்த  கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் கொண்டாபுரம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவவரது மூத்த மகன் மோகித்  என்பவன் அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று அரையாண்டு தேர்வை முன்னிட்டு தேர்வு எழுதிய மாணவர்கள் உணவு இடைவேளையின் போது உணவு வாங்கிக் கொண்டு பள்ளியின் சாய்தளம் தடுப்புச் சுவர் மீது அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டுருந்துள்ளனர், சக நண்பர்களுடன் இணைந்து சாய்தளம் தடுப்புச் சுவரில் அமர்ந்து மதிய உணவு  சாப்பிட்டு கொண்டிருந்த மாணவன் மோகித் சுவரில் இருந்து தடுமாறி  கீழே விழுந்த போது சுற்றுச்சுவர் அவர் மீது சரிந்து விழுந்ததில் மாணவன் மோகித் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்,


இடுப்பாடுகளில் சிக்கி இருந்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர், அங்கு வந்த உறவினர்கள் மோகித் உடலை கண்டு கதறி அழுதனர் அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆர்.கே பேட்டை வட்டாட்சியர் சரஸ்வதி திருத்தணி  (பொறுப்பு) டி.எஸ்.பி கந்தன், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளியின் சாய்தளம் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில்  ஏழாம் வகுப்பு  மாணவன், உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆர்.கே.பேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அத்தகைய சாய்தள தடுப்பு சுவர் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்து இருப்பதால் அதை ஒப்பந்தம் எடுத்து கட்டிய நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் உயிரிழப்புக்கு அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் கவனக்குறைவால் தான் ஏற்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாணவனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவர் மாணவனின் சடலத்தை  போலீசார் எடுக்க விடாமல் 5 மணி நேரமாக போராட்டம் மேற்கொண்டு வந்தனர். போராட்டம் மேற்கொண்டவர்களிடம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி  பேச்சுவார்த்தையில் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவன் சடலத்தை போலீசார் கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.