போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

 
நாளை (செப்.12) உண்ணாவிரதப் போராட்டம் - பகுதிநேர ஆசிரியர்கள் அறிவிப்பு..   நாளை (செப்.12) உண்ணாவிரதப் போராட்டம் - பகுதிநேர ஆசிரியர்கள் அறிவிப்பு..  

தமிழ்நாடு முழுவதும் தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

2009 ஆண்டு மே 31ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும், ஜூன் ஒன்று முதல் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் ரூ.3170 வித்தியாசம், இன்று 16 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளதால் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி எண் 311 உடனடியாக நிறைவேற்றிட வேண்டும், ஊதிய முரண்பாடினை களைய வேண்டும் என வலியுறுத்தி சமவேலைக்கு சம ஊதியம் என 11 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுடன் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட், “தேர்தல் வாக்குறுதி 311யை வலியுறுத்தி டிசம்பர் 26 முதல் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோரிடம் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் பிரச்சனை முடிவடைய வாய்ப்புள்ளது” என்றார்.