சங்கர் ‘ரோபோ சங்கர்’ ஆன கதை!
தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தீபாவளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிச்சயமாகி மாறி புலி, வேலைக்காரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நடிகர் ரோபோ சங்கர் நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார்.
1978 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த சங்கர், 1998 ஆம் ஆண்டு திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் கலை இலக்கிய இரவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உடம்பில் வெள்ளை நிறம் ஆயில் பெயிண்ட்டை தடவி ரோபோ மாதிரி நடந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அன்றிலிருந்து இவருக்கு ரோபோ சங்கர் என்ற புனை பெயர் உருவானது.
வாகுவான உடல் கொண்ட ரோபோ சங்கர், அண்மையில் திடீரென உடல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டிருந்தார். அதன் பின் உடல் நலம் தேறி ஆரோக்கியமாக இருந்து வந்த நிலையில் மஞ்சள் காமாலை நோயால் அவர் அதவதி பட்டுவந்தார் . இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் படப்பிடிப்பின் போது திடீரென அவர் மயக்கம் அடைந்ததை எடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவரது மரணம் அவரது குடும்பம் மட்டுமின்றி திரையுலகம் மற்றும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


