காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் - தவெக அறிவிப்பு

 
tvk tvk

காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்' தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

இதுதொடர்பாக ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் அவர்கள் உத்தரவின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நாளை (15.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.