ஆளுநர் நாள் குறித்து தரங்க... அறிக்கையில் தவறுதலாக பதிவிடப்படும் தேதி! அலட்சியம் காட்டும் செய்தித்துறை
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை ஆளுநர் குறித்துக்கொடுத்தார் என அறிக்கை வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதி நடைபெறும் என்று பேரவை தலைவர் அறிவித்திருப்பதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் ஜூலை 21ஆம் தேதி என்பதற்கு பதிலாக ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அரசிழில் கூட பேரவை தலைவர் பிரபாகர் என்பதற்கு பதிலாக அப்பாவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சமீப காலமாக அரசு சார்பில் அளிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் செய்தி குறிப்புகள் அனைத்திலும் தவறுகள் அதிகமாக உள்ளது. இதை கவனிக்க வேண்டிய செய்தி துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.என நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவுட்டு வருகின்றனர்.
இதனிடையே திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “கடந்த காலங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையை குறிப்பிட்ட தேதியில் கூட்டுவது மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் தான். ஆனால் தற்போதைய த.வெ.க ஆட்சியிலோ ஆளுநர் நல்ல நாள் குறித்து கொடுத்திருக்கிறார் - இந்த நல்ல நாளில் சட்டபேரவையை கூட்டலாம் எனும் வகையில் செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் மாற்றம் - மாற்றம் என சொன்னது உரிமைகளை அடகு வைப்பதுதான் போல!” எனக் குறிப்பிட்டுள்ளது.

