மறைந்த தந்தையின் உடலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மகனால் பரபரப்பு
May 29, 2024, 17:09 IST1716982784971

மதுரையில் மறைந்த தந்தையின் உடலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் வேலுச்சாமி (83) கடந்த 2014ம் ஆண்டு உடல்தானம் செய்திருந்தார். அவர் இன்று மரணமடைந்த நிலையில், உடலை ஒப்படைக்க மருத்துவக் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. ஆனால், மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதால், உரிய அனுமதி பெற்ற பிறகே அனாடமி அறைக்கு உடலை கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனுமதி கோரி, தந்தையின் உடலுடன் மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கிய நிலையில், வேலுச்சாமியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.