"ஒருத்தங்க உள்ள போய் மாட்டிக்கிட்டாங்க, அவங்கள காப்பாத்த போய் மத்த 3 பேரும் சிக்கிட்டாங்க"- கரை ஒதுங்கிய 4 பெண் சடலங்கள்

 
zச் zச்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த  இலங்கை அகதி முகாமை சேர்ந்த பெண் மற்றும் கல்லூரி மாணவி உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தன.

எண்ணூர் பெரியகுப்பம்  கடலோரத்தில் நான்கு பெண்களின் சடலம் மிதந்ததை கண்ட மீனவர்கள் பைபர் படகுகள்  மூலம் கரைக்கு  கொண்டு வந்தனர். ஆழமில்லாத  தரைப்பகுதியான எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெண் மூச்சுத் திணறி அலைகள் சிக்கியுள்ளார். கரையில் இருந்த மூன்று பெண்களும் அலையில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற ஒவ்வொருவராய் முயற்சி செய்த பொழுது அவர்களும் அலைகள் சிக்கி  உயிரிழந்துள்ளனர். மதிய வேளையில் கடற்கரையில் மீனவர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்த நிலையில், பெண்களை காப்பாற்ற முடியாமல் சடலமாக மிதந்துள்ளனர்

இதனை அடுத்து கடற்கரைக்கு வந்த மீனவர்கள்  தூண்டில் வளைவு அருகே சடலங்கள் மிதப்பதை பார்த்து கரைக்கு கொண்டு வந்து   போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த எண்ணூர் போலீசார் விசாரணையில், பெண்கள் தங்கள் கொண்டு வந்த மணி பர்ஸ் பை மற்றும் உடைமைகளை கரையில் வைத்து விட்டு குளிக்க சென்றது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அணிந்திருந்த அடையாள அட்டையில்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதில் தேவகி (30), கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறார். காயத்திரி (18) தேர்வழி கிராமம், பவானி (19) தேவம்பட்டு கிராமம், ஷாலினி (18) எளாவூர் கிராமம், கல்லூரி மாணவி சாலினி(18) Bcom, என தெரிய வந்தது. மூன்று பேரும் கும்மிடிப்பூண்டியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் துணி கடையில் வேலை செய்வது தெரியவந்துள்ளது. எண்ணூர் கடலில் குளித்து உயிரிழந்த 4 பேரும் கும்மிடிப்பூண்டி சுற்றி வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். கடலில் குளிப்பதற்காக வந்த பெண்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.