கூலி ஷூட்டிங் தொடக்கம் - வெளியானது மாஸ் அப்டேட்
Jul 5, 2024, 11:29 IST1720159143690
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
வேட்டையன் திரைப்படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி திரைப்படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசை அமைக்கிறார். அண்மையில் கூலி படத்தில் ரஜினியின் தோற்றத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.