ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!!

 
ttn

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது.  சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கொரோனா  தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

ravi stalin

அவை மரபுப்படி சட்டசபை சபாநாயகர் அப்பாவும்,  சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்று சட்டசபைக்குள் ஆளுநரை வரவேற்பர். அதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எழுந்து நின்று மரியாதை தெரிவிப்பர்.இதையடுத்து நடைபெறும் ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள்  இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் எதிர்க்கட்சியான அதிமுக பல கேள்விகளை கேட்கவும் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதையடுத்து சபாநாயகர் அப்பாவுவின் அறையில் அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.  கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது ? அலுவல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்கப்படும். 

stalin

அனேகமாக மூன்று நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதில் உடன் விவாதங்களும் இடம்பெறும். திமுக ஆட்சியில் இதுவரை செய்துள்ள சாதனைகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் பேசும் தருணத்தில்,  எதிர்க்கட்சியினர் இப்போது ஆட்சியில் உள்ள குறைகளை எடுத்து பேசுவார்கள்.  குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற முக்கிய கருத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்து கேள்வி கணைகளை தொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் சட்டசபையில் விவாதம் காரசாரமாக அமையும். இறுதிநாளன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும் முதல்வர் ஸ்டாலின்  முதலமைச்சரின் விரிவாக பதிலளித்து பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.