ரூ.1,200 கோடியில் கடல் அலையை ரசிக்கும் படியான ’தலைமைச்செயலகம்’

 
ச்

நாம் ஏற்கனவே கூறியது போன்று புதிய தலைமைச் செயலகம் கட்ட 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 

நாம் ஏற்கனவே கூறியது போன்று புதிய தலைமைச் செயலகம் கட்ட 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்டிற்கும் உலகத் தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் அடங்கிய புதிய கட்டடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் மற்றும் கிண்டி உட்பட மூன்று இடங்களை பொதுப்பணி துறையினர் தேர்வு செய்தனர். இதில் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார். முதல்வர் கடற்கரை அழகை ரசித்தபடி பார்க்கும் வகையில் பட்டினப்பாக்கம் பகுதியில் வீடும் நீலாங்கரையில் ஒரு வீடும் வாங்கி உள்ளார். அவர் வாழ்ந்த ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் கடற்கரைப் பகுதி. எனவே கடற்கரையை ஓட்டிய பகுதிகளில் அவர் வங்காள விரிகுடா கடலை ரசித்தபடி அவர் அலுவலக பணியை மேற்கொள்ளவே அதிகம் விரும்புகிறார். அவரது ஜோதிடரின் ஆலோசனையும் அதுவே ஆகும். கடற்கரை பிடித்தமான இடம் என்பதால் அங்கேயே தலைமைச் செயலகம் அமைவது தான் அதிக வாய்ப்பு இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.