சிறையில் அடி வாங்கிய தழும்பு இப்போதும் இருக்கிறது - ஸ்டாலின் வீடியோ வெளியீடு..!!

 
Q

திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் நடந்த சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும், நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். இந்தச் சர்ச்சையில் எனது சிறை வரலாறு இருப்பதால், அதைப் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிறையில் பல கொடுமைகள் நடந்தன. எங்களை அடைத்தே தொழுநோயாளிகள் இருந்த அறையில்தான். 10 பேரைச் சிறிய அறைக்குள் அடைத்தார்கள். அங்குதான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரே துர்நாற்றமாக இருக்கும். அங்குதான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்க விடாமல், போலீஸ் எங்களை லத்தியால் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். மறுபக்கம், ஆயுள் தண்டனைக் கைதிகளை வைத்து அடிப்பார்கள். அவர்கள் தாக்கியதில் என் அண்ணன் எம்.பி. சிட்டிபாபு சிறையிலேயே இறந்துவிட்டார்.

அவர்கள் தாக்கியதால் என் தாடை உடைந்தது. நீங்கள் கை வைத்து தாடையைக் காட்டியது சரிதான். இன்றும் நான் அடி வாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன; எனது தாடை உடைந்தது. யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது. முதல்வர் விஜய் சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்; ஆட்சி நிர்வாகத்தை சினிமா ஷூட்டிங் போல நடத்துகிறீர்கள். எனது வரலாற்றை சட்டசபையில் உள்ள நூலகம் சென்று முதல்வர் விஜய் படித்து பார்க்கட்டும்.சர்காரியாக கமிஷன் பற்றியும், கருணாநிதி பற்றியும் தவறான தகவலை முதல்வர் விஜய் கூறி உள்ளார். அரசியலுக்காக காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யான குற்றச்சாட்டையும் முதல்வரும் தெரிவித்துள்ளார். உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்காரர்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளன. முதல்வராக பொறுப்பேற்ற பின் வீட்டிற்கு வந்தபோது, பிரசாரத்தின் போது அதிகமாக விமர்சித்து விட்டேன் என மன்னிப்பு கோரியதை மறந்துவிட்டீர்களா? அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை.

அப்போதும் யாரை பற்றி பேசும்போதும் கண்ணியத்துடன் பேசுங்கள் என ஆலோசனை கூறினேன். அதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல. ஆட்சி நிர்வாகத்தை சினிமா ஷுட்டிங் போல நடத்துகிறீர்கள். தினந்தோறும் திருட்டு, கொலை, கொள்ளை என சட்ட ஒழுங்கு படுகுழியில் கிடக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் அந்தர் பல்டி அடித்துள்ளீர்கள். எது நிர்வாகத்திறன் வாய்ந்த அரசு, நிர்வாக திறன் இல்லாத அரசு எது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சண்டை செய்வோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.