#JUST IN : ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது - அண்ணாமலை..!
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனை நிரூபிக்கும் வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி பயணம் மேற்கொண்ட அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அண்ணாமலையின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதாக பாஜக தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், அண்ணாமலை இன்று நண்பகல் 12 மணிக்கு சமூக வலைதளம் மூலம் பொதுமக்களிடம் பேசினார்
கடந்த 6 ஆண்டுகளாக பாஜகவில் தமிழக மக்களுக்காக பணியாற்றியுள்ளேன். கடந்த 2020-ல் ஆகஸ்ட் 25-ந் தேதி பாஜகவில் இணைந்தேன். தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்காக பணியாற்றியதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.தமிழ்நாட்டில் ஒரு தனி இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்தார்.. அதற்கான கட்டமைப்பை உருவாக்க அவகாசம் தேவை என்றும் அவர் கூறினார்., மேலும், தனி இயக்கம் கட்சியாக அடுத்த தேர்தலில் போட்டியிடும் என்றும் அண்ணாமலை அறிவித்தார்.
இன்று எந்த இடத்தில், நான் கட்சியின் இணைந்தேனோ அதே இடத்தில் இருந்து மரியாதையோடு, பண்போடு விலகுகிறேன். புதிய இலக்கோடு, புதிய அரசியலை அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய நோக்குடன் பாஜகவில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இன்றுடன் புதிய பாதை, புதிய இயக்கத்தை தொடங்குகிறேன். தமிழ்நாட்டு பண்பாட்டை நான் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. தமிழர் உரிமையை நான் ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. பாஜக தமிழர் அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தேன். பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழன் என்பதே எனது அடையாளம். நீங்கள் தமிழனா அல்லது இந்தியனா என்று கூட வடமாநிலத்தவர்கள் என்னைக் கேட்டனர்.
பாஜக தலைமையுடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. அதனால், கட்சியில் இருந்து விலகும் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில், மேலும் ஒரு புதிய கட்சி தேவை என்பதை நான் உணர்ந்துள்ளேன். என்னுடைய இயக்கம் கட்சியாக மாறும் நாளில் அனைத்தையும் அறிவிப்பேன்.
ரஜினிகாந்த் ஆரம்பிக்கவிருந்த அரசியல் கட்சியில் சேருமாறு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், தான் அதனை ஏற்காமல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். பாஜகவில் நான் இணைந்ததற்கு முதல் நாளில் ரஜினிகாந்த் எனக்கு அழைப்புவிடுத்தார். எனக்கும் ரஜினிகாந்திற்கும் நெருங்கிய நட்பு இருந்தது. ரஜினிகாந்த் அழைப்பை ஏற்க முடியாததற்காக அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டன். இன்றும் ரஜினிகாந்த் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளேன். ஆனால், அவருக்கு மேலும் சிரமம் கொடுக்க விரும்பாததால், கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். பாஜகவில் இருந்து விலகும் முடிவு உடனடியாக எடுக்கப்பட்டது அல்ல. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கட்சியில் இருந்து விலகும் முடிவை தலைவர்களிடம் தெரிவித்து விட்டேன்.
தற்போது தொடங்கியுள்ள இயக்கத்தில் நிறைய பேரை சேர்க்க வேண்டும். இந்த இயக்கம் கட்சியாக மாறும். வரும் பொதுத் தேர்தலில் இந்த கட்சி கண்டிப்பாக போட்டியிடும் என்று அண்ணாமலை தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டிலேயே முதன்மை மாநிலமாக பாஜக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இது நம்ம இயக்கம் என்ற அமைப்பின் இணைப்பை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அண்ணாமலை. இதில் தற்போது வரை சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ, எம்.பி பதவி ஒருவருக்கு எத்தனை முறை என தீர்மானிக்க வேண்டும். அனைவருக்குமான அரசியலில் ஈடுபட உள்ளோம்; ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது; அரசியல் என்பது ஒரு குடும்பத்திற்கான்து மட்டும் அல்ல. தமிழ்நாட்டில் அடுத்த பொதுத் தேர்தலில் நான் தொடங்கும் அரசியல் கட்சி போட்டியிடும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஆனந்தமாக அரசியல் இயக்கத்தை தொடங்குகிறேன். Cult Politics-ல் இருந்து வெளியே வர வேண்டும். நம் கட்சியில் நிரந்தரத் தலைவர், நிரந்தர எம்.பி, எம்.எல்.ஏ. கிடையாது. இணைபவர்களுக்கு அரசியல் தொடர்பான பயிற்சி தரப்படும் என்றார்.
ஒரு புதிய இயக்கம், ஒரு புதிய அரசியல் இயக்கம், ஒரு புதிய பரிமாணத்தோடு இயங்கக்கூடிய வகையில்தான் நமது இயக்கத்தை தொடங்க வேண்டும்; எல்லோரும் சேர்ந்து, இணைந்து இதை ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசை. எனது அரசியல் பாதை எளிதானது அல்ல. வளைந்து, நெளிந்து நான் இங்கு வந்திருக்கிறேன். ஒரு கிராமத்தில் பிறந்து, ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். இதுபோன்ற எளிய பின்னணி கொண்ட மனிதர்கள் அரசியலுக்கு வருவதே அரிது. ஏனெனில், நாம் ஒதுங்கிக் கொள்வோம்; வர மாட்டோம் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.
"www.wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணையலாம்"
அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளோம், ஆளும் கட்சி, எதிர்கட்சி இருந்தாலும் நாம் யாருக்கும் போட்டியில்லை.
நம் கட்சியில் நிரந்தர தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ இல்லை, காலத்திற்கு ஏற்ப கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
என்னோடு வருபவர்கள் பொறுமை, நிதானத்தோடு வர வேண்டும்.

