நேற்று பயன்பாட்டுக்கு வந்த ரோப்கார் இன்று அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு

 
ரோப் கார்

அய்யர்மலையில் அந்தரத்தில் ரோப் கார் நின்றதால் பக்தர்கள் மரண பீதியில் அலறினர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் புகழ் பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1170 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுக்களை கொண்டு மலை உச்சியில் அமையபெற்ற இந்த சிவஸ்தலமானது திருநாவுக்கரசரல் தேவாரம் படாப்பெற்ற திருத்தலமாகும். மலை உச்சியில் செங்குத்தான படிக்கட்டுக்கள் அமைந்துள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மலை உச்சியில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வந்தனர்.

அவர்களின் சிரமத்தினை போக கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் ரூபாய் இரண்டு கோடி மதிப்பில் ரோக்கார அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை பணிகள் தற்போதைய திமுக ஆட்சி காலத்தில் நிறைவடைந்தது. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூபாய் 9.10 கோடி மதிப்பில் ரோப் கார்  மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், காத்திருப்போர் அறை ஆகியவற்றின் கட்டுமான பணிகள்  நிறைவடைந்ததை அடுத்து நேற்று,பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்.

 
இந்நிலையில் அய்யர்மலையில் திடீரென அதிகமாக காற்று வீசியதால் கம்பிகள் தடம் மாறி, ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்திலிருந்து கயிறு நழுவி அந்தரத்தில்  தொங்கியது.பாதியில் ரோப் கார் நின்றதால் கீழே இருந்து மேலே செல்லும் பெட்டியில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏணி மூலம்  பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர். ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.