செயினை பறிக்க பெண்ணை தர தரவென இழுத்து சென்ற கொள்ளையர்கள்

கோவை ஜி.வி.ரெசிடென்ஸி அருகே நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணின் செயினை பறிக்க காரில் தரதர வென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா(38). இவர் வழக்கமாக தனது கணவருடன் நடைபயிற்சிக்குச் செல்வார். இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கவுசல்யா மட்டும் நடைபயற்சிக்கு சென்றார். அப்போது கவுசல்யா ஜி.வி.ரெசிடென்ஸி அருகே வந்த போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர்.
கோவை: பெண்ணின் செயினை பறித்து இழுத்துச் செல்லும் காட்சி!#Theekkathir | #chainsnatch | #CoimbatoreNews pic.twitter.com/fZEylv4xTP
— Theekkathir (@Theekkathir) May 15, 2023
அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் காரில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது அதிஷ்டவசமாக டயரில் சிக்காமல் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.