தங்கம் வாங்க சரியான நேரம்..!! 6 நாட்களில் சவரனுக்கு ரூ.2,500 குறைந்தது..
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த 6 நாட்களில் சவரனுக்கு ரூ.2,500 குறைந்துள்ளது..
சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை, கடந்த வாரம் தொடங்கியதில் இருந்தே இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த திங்கள் கிழமையன்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், செவ்வாய் கிழமையன்று சவரனுக்கு ரூ.600 குறைந்த. தொடர்ந்து 3வது நாளாக கடந்த புதன் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.72,560க்கும் ,கிராமுக்கு 85 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.9,070க்கு விற்பனையானது.

மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ( ஜூன் 27) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, சவரன் ரூ 71,880க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.8,985க்கு விற்கப்பட்டது. அதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.120க்கு விற்பனை செய்யபப்ட்டது.,
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து இரு சவரன் ரூ.71,320க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த 6 நாட்களில் சவரனுக்கு ரூ.2,500 குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.


