"கூட்டணி வலுவாக இல்லாததே தோல்விக்கு காரணம்" - அதிமுக நிர்வாககள்

 
EPS

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.  9 தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக,  ஒரு தொகுதியில் நான்காம் இடத்தை அடைந்தது.  மக்களவைத் தொகுதி வாரியாக காட்சி நிர்வாகிகளுடன் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த திட்டமிட்டார்.

EPS

அதன்படி நேற்று காஞ்சிபுரம்,  ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

EPS


இந்நிலையில் தேர்தல் தோல்வி தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அல்லாத வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.