போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ரவுடி - பதிலுக்கு போலீசார் சுட்டதில் ரவுடி காயம்

 
Covai

கோவையில் விசாரணக்காக சென்ற போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ரவுடியை,  போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை காட்டுமடம் பகுதியை சேர்ந்தவன் பிரபல ரவு சஞ்சய் ராஜா. இவன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயுத வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக அவரை தேடி காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலா மற்றூம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இந்நிலையில், போலீசாரை கண்ட ரவுடி சஞ்சய்,  காவல் ஆய்வாளர் கிருஷ்ணலீலாவை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது. சுதாரித்துக்கொண்ட காவல் ஆய்வாளர் அதில் இருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில், உடனிருந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி சுட்டதில், அவரின் காலில் காயம் ஏற்பட்டது.

தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் சந்திரசேகர் சுட்டதில் முட்டில் காயம் அடைந்த சஞ்சய் ராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக சென்ற போலீசார் மீது ரவுடி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், போலீசார் பதில் தாக்குதல் நடத்தி பிடித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.