புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 20-ம் தேதி கூடுகிறது

 
புதுச்சேரி  சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 20-ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி: ``அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளுக்குச் சட்டப்பேரவையில்  தண்டனை!” – சபாநாயகர் செல்வம் | puducherry assembly Speaker Selvam slams  govt officials - Vikatan

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், “புதுச்சேரி அரசின் 15-வது சட்டப்பேரவையிலன் 4-வது கூட்டத்தொடரின் 2-ம் பகுதி செப்டம்பர் மாதம் 20-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்படுகிறது, அன்று சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடத்துவது என அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும். புதிய சட்டப்பேரவை கட்ட ரூ.612 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் டெண்டர் கோரப்படும். டிசம்பர் மாதம் பூமி பூஜை நடத்தப்படும். இரண்டு வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டு எங்களது கூட்டணி கட்சி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தலைமையில் திறந்து வைக்கப்படும்

புதுச்சேரி

கடலோர கிராமங்களில் நிலத்தடியில் மின் புதைவடம் கேபிள் புதைக்க மத்திய அரசு நிதியில் 11 கோடி ரூபாயில் 2 கோடி தான் செலவிடப்பட்டது. இதிலும் ஊழல் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உத்தரவிடுவேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருக்கும் போதே மாநில அந்தஸ்து பெறுவோம். அந்த நம்பிக்கை உள்ளது, இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் செய்த சிறு தவறால் கேஸ் மானியம் வழங்கப்படாமல் இருந்தது. அது இப்போது சரி செய்யப்பட்டது. இரண்டு தினங்களில் அந்த மானியம் செலுத்தப்படும்” என்றார்.