பொதுமக்கள் அவசர கட்டுப்பாட்டு எண்ணிற்கு அழைக்கலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!!

 
chennai corporation


சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Chennai rain
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக சென்னைக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதனால் நேற்று பிற்பகல் முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

rain
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  "கனமழை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் படகுகளும் தயார் நிலையில் உள்ளன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் எதிர்பார்த்த கனமழை இதுவரை பெய்யவில்லை. படகுகள் அனைத்து இடங்களிலும் தயாராக உள்ளது. மழை பெய்தால்  உணவு வழங்க தயார் நிலையில் உள்ளோம். சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணிநேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறை ரிப்பன் மாளிகையில் செயல்படுகிறது; பொதுமக்கள் 1913 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.