ஸ்பெயின் நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - உற்சாக வரவேற்பு

 
tn

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு சென்றடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் அவர்கள் வரவேற்றார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு 271.2024 அன்று இரவு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு, நேற்று (281.2024) மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.

tn


மேட்ரிட் சென்றடைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு. தினேஷ் கே. பட்நாயக் அவர்கள் தூதரக அதிகாரிகளோடு மலர்கொத்து வழங்கி வரவேற்று, சந்தித்து பேசியபோது, ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் உடனிருந்தார்.

ym

ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று நடத்த உள்ளார்கள். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.