ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்வு!!

 
gold

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது.

gold
மே மாதத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை சரிவை சந்தித்தது. நேற்று மே 1 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 53,720க்கு விற்பனையாகிறது.  கிராமுக்கு ரூ.80 அதிகரித்து 1 கிராம் ரூ. 6,715க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

gold

அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 87-க்கும், ஒரு கிலோ ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.