ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

 
gold

அட்சய திருதியை நாளான இன்று ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. 

gold

 நாடு முழுவதும் இன்று அட்சய திருதியை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாவது நாளில் அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது.    இந்நாளில் ஏராளமானோர் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குவர். இன்றைய தினம் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் மேலும் செல்வம் பெருகும் என்று நம்புவதால் ,  ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிட வேண்டும் என்று பலரும் விரும்புவர்.

gold

இந்நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. அட்சய திருதியை நாளான இன்று காலையில் ஏற்கனவே தங்கம் விலை சவரனுக்கு ரூ 360 உயர்ந்த நிலையில், தற்போது மேலும் 360 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 53,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.