சற்று உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை..!!
Dec 11, 2025, 09:35 IST1765425924359
தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும், சவரன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் விற்பனை விற்பனையானது
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.12,050க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


