தங்கம் விலை சற்று குறைந்தது!

 
Q

தங்கம் விலை கடந்த பிப்.23-இல் பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்து ரூ.1,18,880, பிப்.24-இல் பவுனுக்கு ரூ. 240 உயா்ந்து ரூ.1,19,120-க்கு விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.14,930-க்கும், பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.1 லட்சத்து 19,440-க்கும் விற்பனையானது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்து விற்பனையானது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,920-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19,360-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 295-க்கும், ஒரு கிலோ ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையானது.

அந்த வகையில், சென்னையில் இன்று (பிப்.27) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.14,900க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,19,200க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.