அதிரடியாக குறைந்த தங்கம் விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின்  விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது.

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற,  இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் கடந்த வாரம் ரூ. 46 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணமே இருந்தது.

gold

இந்நிலையில் இன்றைய தினம் 22  காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 37 ரூபாய் குறைந்துள்ளது . இதன் மூலம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 5705 ஆக உள்ளது. அதேபோல்  சவரனுக்கு ரூபாய் 296 குறைந்து 45 ஆயிரத்து 640 ஆக தங்கம் விற்பனை ஆகி வருகிறது.

gold

அத்துடன் வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.4.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 78.70 காசுகளுக்கும்,  ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரத்து 700 ஆகவும் விற்பனைக்கு வருகிறது.