'ஜனாதிபதி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 
tn

'ஜனாதிபதி என்பது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வருகிற 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பதற்கான தங்க செங்கோலுடன் தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். மே 28ஆம் தேதி திறக்க உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் உம்முடி  பங்காரு நகை நிறுவனம் தயாரித்த செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மாநில ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் கூட்டாக பேட்டி அளித்தனர்.

புதிய நாடாளுமன்றம் கட்டடம்
 

அப்போது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்," குடியரசு தலைவரை  மிகவும் உயர்வாக கருதுகிறோம். அது ரப்பர் ஸ்டாம்ப் பதவி அல்ல;  ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தை திறக்கும் நிகழ்வில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.  தமிழ்நாட்டில் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய நிகழ்வு இது.  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எதிர்க்கட்சிகள் தங்களது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும். மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு முறையான அழைப்பு விடுத்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதில் எந்த அரசியலும் இல்லை. செங்கோல் வரலாறு குறித்து அறிந்து கொள்ள பிரத்தியேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 

செங்கோல்

ஆட்சி மாற்றத்தை குறிக்க செங்கோல்  பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்னும் பல நாடுகளில் உள்ளது. செங்கோலை உருவாக்கி தந்த நகைக்கடை உரிமையாளர்களை பிரதமர் கவுரவிப்பார்.  1978 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று காஞ்சி சங்கரமட நிகழ்சியில் செங்கோல் கதையை அப்போதே காஞ்சி மடாதிபதி மகா  பெரியவர் எடுத்துக் கூறினார்.புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் ஒன்றாக அழைக்கப்படுவர். திருவாடுதுறை, தர்மபுரி,  திருப்பனந்தாள் உள்ளிட்ட 20 ஆவணங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளுக்கு செங்கோல் நாட்டின் சின்னமாக இருக்கும்" என்றார்.