"இரவல் சக்தி.. வாடகை சக்தி.." - முதல்வர் விஜய்யை வம்புக்கு இழுத்த அதிமுக இன்பதுரையின் அதிரடி ட்வீட்!

 
1

திருச்சி கிழக்கு தொகுதி நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பேசிய புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், திமுக மற்றும் அதிமுக-வை " தீய சக்தி மற்றும் தீர்ந்து போன சக்திகள்" என ஒரே மேடையில் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார். விஜய் பேசி முடித்த சில மணி நேரங்களிலேயே, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தரப்பில் இருந்து இன்பதுரை களமிறங்கியுள்ளார்.

விஜய்யின் இந்த விமர்சனம் ஊடகங்களில் வெளியாகி விவாதப் பொருளாக மாறிய அடுத்த சில நிமிடங்களிலேயே, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ முகமாக இன்பதுரை தனது எக்ஸ் (X) தளத்தில் பதிலடியைப் பதிவு செய்தார்.

இரவல் சக்தியால் கோட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக! என பதிவிட்டுள்ளார்.


விஜய் 'தீர்ந்து போன சக்தி' என்று சொன்னதற்குப் போட்டியாக, தற்போதைய தவெக அரசை வாடகை சக்தி என்று இன்பதுரை சாடியுள்ளார். அதாவது, தற்காலிகமான ஒரு அரசியல் அலையில் கோட்டையைப் பிடித்துள்ள இந்த ஆட்சி நிரந்தரமானது அல்ல; வாடகை வீட்டைக் காலி செய்வது போல் விரைவில் காலி செய்யப்படும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.