போலீஸ் ஸ்டேசனுக்கு கை விலங்கால் பூட்டு... ஆச்சர்யத்துடன் பார்த்து செல்லும் மக்கள்
கைதிகளுக்கு போடப்படும் கை விலங்கு வைத்து காவல் நிலைய வளாக கதிவிற்கு பூட்டாக பயன்படுத்திய காவல்துறையினரின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுத்த கணியம்பாடிக்கு உட்பட்ட பகுதியில் பல குற்ற செயல்களை தடுக்கும் விதமாக கிராமிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. கணியம்பாடி காவல்துறையினர் வாகன சோதனை செய்து ஆவணங்கள் இன்றி வாகனங்களை பயன்படுத்தி வந்த வாகனங்கள், மது போதையில் சிக்கிய வாகனங்கள், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்த வாகனங்கள் என பல வழக்கு பதியப்பட்டு கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட கதவிற்கு பூட்டு போடாமல் பூட்டிற்கு பதிலாக கைதிகளுக்கு போடப்படும் விலங்கை காவல் நிலைய வளாகத்தில் உள்ள கதவிற்கு போடப்படும் கைவிலங்கை பூட்டாக காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். காவல் நிலையத்திற்கு ஒரு பூட்டு கூட வாங்காமல் கைதிகளுக்கான கை விலங்கையே பூட்டாக பயன்படுத்தி வருவது அவ்வழியாக செல்லும் பொது மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் நான்கிலிருந்து ஐந்து கை விளக்கு கொடுக்கப்படுகிறது அதை கைதிகளுக்கு போடப்படாமல் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நுழைவு கதிவிற்கு போடப்பட்டு இருக்கிறது அப்பொழுது கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது கை விலங்கு இல்லாமல் அழைத்துச் செல்கிறார்களா என சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.


