2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையார் பாதத்திற்கு போலீசார் தீபமேற்றி வழிபாடு

 
பூஜை

காவல்துறை சார்பில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மகா தீபம் மற்றும் பரணி தீபம்... பக்தர்களுக்குத் தடை!  கட்டுப்பாடுகள் என்னென்ன? | Thiruvannamalai temple to follow strict norms  for deepam celebrations this year ...

கார்த்திகை தீபத் திருவிழா  நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற உள்ள நிலையில் நவம்பர் 26 ம் தேதி காலை கோவிலில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீபமலையின் மீது  6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவிற்காக வரும் ஆன்மீக பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காகவும் அடிப்படை வசதிகளுக்காகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கோவில் நிர்வாகம் என பல்வேறு துறையினர் மும்முரமாக பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா எவ்வித பிரச்சனைகளும் இன்றி சுமூகமாக திருவிழா நடந்து முடிவதற்காகவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் வருகின்ற ஆன்மீக பக்தர்கள் சிறப்பான முறையில் சாமி தரிசனம் செய்து பாதுகாப்பாக தங்கள் வீட்டிற்கு செல்லவும் காவல்துறை சார்பில் 2668 அடி உயரம் கொண்ட தீபமலையின் உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையார் பாதத்திற்கு போலீசார் தீபமேற்றி  வழிபாடு | Dinamalar

அதன்படி இந்த ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில், திருவண்ணாமலை நகர காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் கொண்ட போலீசார் இன்று அதிகாலை மலை உச்சிக்குச் சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு பல்வேறு மலர்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து அலங்கரித்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்தனர்.