காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது, உங்களுக்கு ஏன் அவசரம்?- தவெக வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி

 
vijay vijay

காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது, உங்களுக்கு ஏன் அவசரம்? உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? என தவெக வழக்கில் சென்னை  உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Highcourt

சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில், திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை சிவானந்தா சாலையில் ஜூலை 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி த.வெ.க தரப்பில், நீதிபதி வேல்முருகன் முன் முறையிடப்பட்டது.

இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, இன்று பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு பதில், அ்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். குற்றம் செய்யாதீர்கள், மனைவியை கொடுமைப்படுத்தாதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இன்னும் ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளன. முதலில் அதை திருத்தக் கூறுங்கள் என தெரிவித்தார். பின்னர், மனு எண்ணிடப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தியிருந்தார். தொடர்ந்து மதியம் ஆஜரான தவெக தரப்பு வழக்கறிஞர், வழக்கு எண்ணிடப்பட்டு விட்டதாக உடனடியாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது, உங்களுக்கு ஏன் அவசரம்? உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? காவல்துறைக்கு அழுத்தும் தரவேண்டாம், அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக கடிதம் தர வேண்டும், கூட்டம் நடத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் காவல்துறைக்கு கால அவகாசம் தாருங்கள் என்று தெரிவித்த நீதிபதி காவல்துறைக்கு மீண்டும் மனு அளிக்க வேண்டும், காவல்துறை அந்த மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.