பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்; ஆளுநர் மாளிகை அல்ல..! - ப.சிதம்பரம்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். இது மட்டும் இல்லாமல், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனக்கு ஆதரவு அளிக்கும்படி வீசிக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். இந்த மூன்று கட்சிகளிடம் மொத்தம் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இப்படி இருக்கையில், அவர்கள் இன்னும் தங்களது முடிவை அறிவிக்காமல் இருக்கின்றனர்.
இந்நிலையில், பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய களம் சட்டமன்றம் கவர்னர் மாளிகை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
இது தான் அரசியல் விதி. இது தான் நாடாளுமன்ற மரபு. அந்தக் கட்சியின் தலைவர் தனக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று நிரூப்பிக்க வேண்டிய களம் சட்டமன்றம்; ஆளுநர் மாளிகை அல்ல. இது தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு: 1994 (3) SCC 1 இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை நான் பாராட்டுகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது அரசியல் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், ஆளுநரின் கடமை என்ன?
— P. Chidambaram (@PChidambaram_IN) May 8, 2026
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
இது தான் அரசியல் விதி. இது தான்…

