நடிகை கவுதமியிடம் மோசடி செய்தவர் கைது

 
கவுதமி சொன்ன அந்த ‘தந்திரம்’… ஒரே வார்த்தையில் போட்டு தாக்கிய கமல்!

நடிகை கவுதமிக்கு அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

கமலை பற்றி பேசாதீங்க…அது மார்க்கெட்டிங் தந்திரம் : விளாசும்  கவுதமி


கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றி விட்டதாக அழகப்பன் என்பவர் மீது நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார். அதில், அழகப்பன் என்பவரோடு சேர்த்து பலராமன் மற்றும் என்.பி.ரகுநாதன் என்பவரும் மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் 10 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்ததாக அழகப்பன், பலராமன் மற்றும் என்.பி. ரகுநாதன் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார். சொத்தை விற்பதற்காக பொது அதிகாரம் கொடுத்த தன்னை ஏமாற்றி சுமார் 11 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும்,  தனக்கு நான்கு கோடியே 10 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணம் சுமார் 7 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் வருமானவரித்துறை நோட்டீஸ் வந்தபோதுதான் தன்னுடைய சொத்தை முறைகேடாக பலராமன், அழகப்பன், ரகுநாதன் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்தது தெரியவந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். எனவே தன்னை மோசடி செய்த பணம் சுமார் 7 கோடி ரூபாயை மீட்டுத் தருமாறும், சொத்துக்களை ஏமாற்றிவிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார்.

மனுஸ்மிருதியில் பெண்களை இழிவுப்படுத்தும் கருத்து இல்லை: நடிகை கவுதமி

இந்நிலையில் நடிகை கவுதமி கொடுத்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், நடிகை கவுதமிக்கு அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த 64 வயதான பலராமனை காவல் ஆய்வாளர் ஆபிரகாம் தலைமையிலான குழு கண்டுபிடித்து கைது செய்தது.