வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவு

 
தொடரும் மரணம்; வெள்ளியங்கிரி மலையில் டிரெக்கிங் சென்ற பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார்

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வழங்கப்பட்ட 3 மாத கால அனுமதி  நிறைவடைந்ததால் வெள்ளிங்கிரி மலையேறும் பாதையை வனத்துறையினர் மூடி அறிவிப்பு பலகை வைத்தனர். 

வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒருவர் மயங்கி விழுந்து பலி

தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை பக்தர்கள்  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின் படி கடந்த பிப்12 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வந்த நிலையில், நடப்பாண்டில் சுமார்  2.25 லட்சம் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதே போல வெள்ளிங்கிரி மலையேறிய 9 பேர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். 

இந்நிலையில் மே 31 ஆம் தேதிக்கு பின் மலையேற்றத்தற்கு அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்த நிலையில் , மாலை 5 மணிக்கு போளூவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரன் முன்னிலையில்  சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு வெள்ளியங்கிரி மலையேறும் பாதை மூடி பூட்டப்பட்டது. மேலும் பக்தர்கள் மலையேற அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. தற்போது சுவாமி தரிசனத்திற்காக மலையேறிவர்கள் கீழே இறங்க வர மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டது.