சுற்றுலா வந்து வாலாட்டியவர்களை கும்மியெடுத்த குற்றாலம் மக்கள்

 
kudi

குற்றாலம் சென்று குளித்து விட்டு ஊருக்கு செல்லும் வழியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட  இளைஞர்களுக்க்கு, பதிலுக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பி வைத்த ஊர்மக்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாரதியார் தெருவை சேர்ந்த விக்னேஷ், அதே ஊரை சேர்ந்த யோகேஸ்வரன், சூர்யா , இளங்கோ, ஆகிய நான்கு பேரும் இன்னோவா காரில் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு சென்று அருவிகளில் குளித்துவிட்டு பின்பு ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தனர். சங்கரன்கோவில் வழியாக சென்று கொண்டிருக்கும் போது தெற்கு ரத வீதியில் உள்ள உணவகம் அருகே நிறுத்தி உள்ளனர். நான்கு பேரும் குடிபோதையில் இருந்ததால் அப்பொழுது எதிரில் வந்த காருக்கு வழி விடாமல் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

உணவகம் அருகே இருந்த பெரிவர்கள் சிலர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது குடி போதையில் இருந்த இளைஞர்களை சமாதானம் செய்ய முயன்ற பெரியவர்களை அடித்து கீழே தள்ளிவிட்டனர். அதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் கீழே விழுந்தவரை தூக்கி அருகில் உள்ள கடையில் அமர வைத்தனர். அப்பொழுது உள்ளூர் இளைஞர்களையும் குடி போதை ஆசாமிகள் தாக்க துவங்கியதால் பதிலுக்கு உள்ளூர் இளைஞர்களும்  தாக்கினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த சம்பவத்தால் சங்கரன்கோவில் தெற்கு ரத வீதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது . ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் குற்றாலம் சென்று விட்டு குடிபோதையில் சங்கரன்கோவிலில் ரகளையில் ஈடுபட்டு தர்மடி வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.