"சிறந்த பின்னணிப்பாடகியை இசையுலகமும், திரைத்துறையும் இழந்திருக்கிறது" - ஜி.கே.வாசன் இரங்கல்!!

 
tn

பவதாரணியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான பவதாரணியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. பவதாரணி அவர்கள் உடல்நலன் குன்றி இலங்கையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.தனித்துவமான இனிய குரல்வளத்தால் பல பாடல்களைப் பாடி இரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர்.

tn

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது பெற்ற பெருமைமிக்கவர். இசையமைப்பாளராக என்பதும் குறிப்பிடத்தக்கது. பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் இளம் வயதிலேயே அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

tn

ஒரு சிறந்த பின்னணிப்பாடகியை இசையுலகமும், திரைத்துறையும் இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அன்பு மகளை இழந்து வாடும் இசைஞானி இளையாராஜா அவர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.