இறந்து விட்டான் என நினைத்த பெற்றோர்.. திடீரென வந்து நின்ற மகன்! பெற்றோர் கண்ணீர்

 
மகன்

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து அட்சயம் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மீட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தைச் சார்ந்தவர் சையது மைதீன். தாய் பர்வீன், தந்தை  சையது மொய்ன், சகோதரி சலேகா சுல்தானா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை இவர் தொடர முடியவில்லை. பள்ளி படிப்பு முடிந்த உடனேயே இவர் ஜம்மி குண்டா பகுதியில் உள்ள Pvc பைப் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். அவரது அக்காவுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் செய்யப்பட்ட பொழுது திருமணம் செலவிற்காக அவர்களது  சொந்த வீட்டை விற்று அவரது அக்காவின் திருமணத்தை செய்தனர்.

அதற்குப் பிறகு வீட்டில் பணப் பிரச்சனை ஏற்பட்டதஈல் மன அழுத்தத்திற்கு ஆளான சையது மைதீன், வீட்டை விட்டு வெளியேறினார். அவர் அவருடைய துணி அவருடைய அடையாளங்கள் மற்றும் பணம் ஆகியவை எடுத்து வந்துள்ளார். எங்கு செல்வதென்று தெரியாத  சையது மைதீன்  ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூருக்கு வரும் ரயில் வண்டியில் ஏறி வந்துள்ளார். அவர் பயணித்து வரும் பொழுது அவருடைய அனைத்து பொருள்களும் உடமைகளும் பணமும் பறிபோகிவிட்டன. மொழி தெரியாத ஊருக்கு வந்த  சையது மைதீன்  யாரிடமும் இவ்வாறு உதவி கேட்பது என்று அறியாமல் இருந்துள்ளார்.

என்ன செய்வதென்று தெரியாத சையது மைதீன் ஒன்றரை வருட காலமாக ஒரே ஒரு ஆடையை அணிந்து கொண்டு உண்ண உணவில்லாமல் உடுத்த உடை இல்லாமலும் உறங்குவதற்கு இருப்பிடம் இல்லாமல் சாலையோரம் செல்பவர்களிடம் யாசகம் பெற்று தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியேறிய தருணம் நாடே வீட்டுக்குள் அடங்கி இருந்த தருணம் அதாவது கொரோனா என்னும் தொற்றுநோயால் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருந்த நாட்கள் அவை அதனால் சையது மைதீன் அவர்கள் யாசகம் பெற கூட அதிக வழி இல்லாமல் பல நாட்கள் உண்ண உணவில்லாமல் இன்னல்களுக்கு ஆளாகி வாழ்ந்து வந்துள்ளார். மேலும் இவர்  உதவி கேட்டு செல்லும் பொழுது அங்கு இருப்பவர்கள் இவரை மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த அளவில் காயப்படுத்தி உள்ளனர். அதாவது இவர் யாரிடமாவது யாசகம் கேட்டுச் சென்றால் அங்குள்ளவர்கள் இவரை அடித்து துன்புறுத்துகிறார்கள். அதனால் இவருக்கு தமிழ் பேசுபவர்கள் என்றாலே ஒரு வித பயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் பல இன்னல்களுக்கு ஆளாகி ஒன்றரை வருடங்கள் இவ்வாறே சென்று விட்டன. 

அதனை அடுத்து கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு நடைபயணமாகவே நடந்து வந்துள்ளார். பெருந்துறையில் உள்ள சரளை பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்த சையத் மைதீன், அங்கு தனது தாய் மொழி பேசுபவர்களை சந்தித்துள்ளார். அவர்களிடம் தனது நிலையை எடுத்துரைத்து அவர்களிடம் சற்று உதவி பெற்றுள்ளார். வீட்டை விட்டு வெளியேறி ஒன்றரை வருடம் கழித்து தான் உடுத்திருந்த ஆடையை மாற்றியுள்ளார். மேலும் தனது தாயாரிடம்  பேசியுள்ளார். சரளை பேருந்து நிறுத்தத்தில் அவர் தங்கி இருந்தபோது அவருடன் இரண்டு நாய்கள் அவர் அருகே கட்டப்பட்டு உணவில்லாமல் அவைகளும் மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்டன. இவரை பற்றிய தகவல் அறிந்த அட்சயம் அறக்கட்டளை தன்னார்வளர்கள்  சையது மைதீனை  மீட்டு மனநல சிகிச்சை அளித்தனர். பின் அவரை குடும்பத்தினருடன்  சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்தனர். மகன் இறந்து விட்டான் என நினைத்திருந்த பெற்றோர் ஆந்திராவில் இருந்து வந்து கண்ணீர் மல்க மகனை ஆரத் தழுவி அழைத்துச் சென்றனர்..