மாடு முட்டி முதியவர் படுகாயம்! சென்னையில் தொடரும் சோகம்

 
மாடு முட்டி பலி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பால் வாங்க சென்ற முதியவரை மாடு முட்டி கீழே தள்ளியதில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நேற்று மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரி வந்த மாடு திடீரென முட்டி தூக்கி வீசியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவல்லிக்கேணி வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன்(71). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இன்று காலை கண்ணியப்பன் திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள பால் கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாடு ஒன்று முதியவர் பின்பக்கம் முட்டி தள்ளியதில் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் முதியவரை மீட்டு ஆட்டோவில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் முதியவர் கண்ணியப்பனுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டிய பொழுது அதிகாரிகள் முகாமிட்டு மாடுகளை பிடித்த நிலையில் மீண்டும் விட்டு சென்றதால் நிகழ்வுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருவல்லிக்கேணியில் தொடர்ந்து மாடு முட்டி பாதிக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்