பைக் திருட வந்த திருடனை வெளுத்து வாங்கிய முதியவர்! அடி தாங்க முடியாமல் ஓடிய திருடன்

 
theft

திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் இளைஞருடன் ஆக்ரோஷமாக போராடும் முதியவர் வீடியோ வைரலாகிவருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு ஒன்றியம்  அத்திமாஞ்சேரிப்பேடையில் கிராமத்தில் 06/05/2024 திங்கட்கிழமை இரவு 12 மணியளவில் இரு சக்கர வாகனம் திருடவந்த இருவரை கிரி என்பவர் மடக்கி பிடிக்க முயன்றபோது அவனது செல்போனை விட்டுவிட்டு  இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு தப்பிச் சென்றான். பிறகு பொதுமக்கள் ஒன்று கூடி விரட்டிச்சென்ற போது அவனுடைய இருசக்கர வாகனத்தையும் விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டான். 


பிறகு காவல் துறையினர் வந்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது ஆதார் கார்டு ATM கார்டு மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் எடுத்துச் சென்றனர்