4-வது மாடி அறைக்கு டீ கொண்டு வந்த நர்ஸ்! போட்டோவை திருடி ரூ.2 கோடி கறந்த அதிர்ச்சி சம்பவம்..!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் 65 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மருத்துவமனையில் கமலா என்ற நர்ஸ் ஒருவர் பணிக்குச் சேர்ந்தார்.
இந்நிலையில் இவர் டாக்டரிடம் இருந்து ரூ.2 கோடி வரை மிரட்டி பணம் பறித்துள்ளார். பொய்யான கற்பழிப்பு வழக்கின் மூலம் டாக்டரை சிக்க வைப்பதாகவும், அவரது தனிப்பட்ட அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாகவும் மிரட்டி தொடர்ந்து பணம் கறந்துள்ளார். மேலும் டாக்டருக்கு கொலை மிரட்டலும் விடுத்து வந்தார்.
இதுகுறித்து பார்மர் நகர் போலீசில் டாக்டர் புகார் செய்தார். எனவே நர்ஸ் கமலா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தகுந்த ஆதாரங்களுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து நர்ஸ் கமலா நீதிமன்றத்துக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் டாக்டருக்கு எதிராக பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அதில் டாக்டர் ஒரு தொடர் கற்பழிப்பு குற்றவாளி. அவர் கடந்த பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பல பெண் நோயாளிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். ஆசைவார்த்தை கூறி பெண்களை மயக்குவதில் அவர் கில்லாடி.
அவரிடம் பெண்களை அழைத்து செல்ல மருத்துவமனையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து சில பெண்கள் ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பெருமளவில் பணம் கொடுத்து அந்த பிரச்சினைகளை முடித்துள்ளார்.நான் ஏற்கனவே இது குறித்து டாக்டருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடக்குவதற்காகவே அவரை மிரட்டி பணம் பறித்ததாக பொய்யான வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எதையும் போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
மேலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே டாக்டர் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் நர்ஸ் கமலா கடந்த 2016 டிசம்பர் முதல் எனது மருத்துவ மனையில் பணிபுரிந்தார். பெரும்பாலும் அவர் இரவு நேர பணியில் இருந்தார். தேனீர் தயாரிக்கும் காரணத்தைக் கூறி மருத்துவமனையில் 4-ஆவது மாடியில் இருக்கும் எனது அறைக்கு வருவார்.
அப்போது எனக்கு தெரியாமல் எனது செல்போனில் இருந்த தனிப்பட்ட புகைப்படங்களை தனது போனில் எடுத்ததார். அதை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.2 கோடி வரை பணம்பறித்ததாக தெரிவித்துள்ளார்.

