தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு..!!

 
Q

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை தலைமை செயலகத்திற்கு வந்தார். சபாநாயகர் பிரபாகரை சந்தித்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக எழுத்துப்பூர்வ கடிதம் அளித்தார். அப்போது, சட்டசபை செயலர் சாந்தியும் உடனிருந்தார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.இந்நிலையில் இன்று கரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை தற்போது 7 ஆக உயர்ந்துள்ளது.

அதன் விவரம்;

1.திருச்சி கிழக்கு

2.மதுராந்தகம்

3.தாராபுரம்

4.பெருந்துறை

5.அம்பாசமுத்திரம்

6.விராலிமலை

7.கரூர்இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.