இனி கோயில்களில் அன்னதானம் சாப்பிடுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும்!

 
s

கோயில்களில் அன்னதான திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், 10 திருக்கோயில்களில் அன்னதானம் பெறும் பக்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கும் திட்டத்தை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “சட்டமன்ற அறிவிப்பு எண் 76 – அன்னதானத் திட்டம் விரிவாக்கம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2026–2027 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை சட்டமன்ற அறிவிப்பு எண் 76-இல் அறிவிக்கப்பட்ட அன்னதானத் திட்ட விரிவாக்கத்தைச் செயல்படுத்தும் வகையில், 10 திருக்கோயில்களில் நாள்தோறும் அன்னதானம் பெறும் பக்தர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டத்தை இன்று (13.10.2026) தொடங்கி வைத்தேன்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


-  10 திருக்கோயில்களில் அன்னதானம் பெறும் பக்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கம்.
-  கூடுதலாக 2,25,475 பக்தர்கள் பயன்பெற வழிவகை.
-  மொத்தம் 5,08,350 பக்தர்கள் அன்னதானத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவர்.

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி, பக்தர்களின் நலனையும் மக்கள் சேவையையும் முன்னிறுத்திச் செயல்படுவதே நமது அரசின் உறுதிப்பாடு.”எனக் குறிப்பிட்டுள்ளார்.