தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது..!

 
rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவிலும் இந்த பருவமழை துவங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு சீரான மழைப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. குமரி கடல் பகுதிகள், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை ஒட்டி, சென்னையில் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனை நடத்தினர். மழை காலத்தில் சென்னை மற்றும் மழையினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.