வடகிழக்கு பருவமழை தொடங்கியது! அக்டோபர் 16-21 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்?

 
rain school

தென்மேற்கு பருவமழை விலகியது.. வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியது.

அக்டோபர் 16: சென்னை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 17: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 18: நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

அக்டோபர் 19: நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 20: நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

அக்டோபர் 21: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 16 முதல் 21 வரை மழையின்போது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.