மக்களுக்கு அடுத்த ஷாக்..!!2வது முறையாக உயர்ந்த ரயில் டிக்கெட் விலை..!!
ரயில் டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கு குறைவான பயணங்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை.
அதேநேரம், சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 500 கி.மீ. தூர ஏசி அல்லாத பயணத்திற்கு பயணிகள் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டிய நிலை இந்த கட்டண உயர்வு மூலம் உருவாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலமாக ரூ. 600 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிக்க ரூ15 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.


