மக்களுக்கு அடுத்த ஷாக்..! வாட்ஸ் அப் இனி ஃப்ரீ இல்லையாம்..!

 
1

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். இத்தகைய சூழலில் பல ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் இதை இலவசமாகப் பயன்படுத்தி வந்தோம். இப்போது மெட்டா ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் சந்தா இந்தியாவிலும் அறிமுகமாகியுள்ளது.

இனி அனைவரும் பணம் கொடுத்து தான் வாட்ஸ்அப் பயன்படுத்தணுமா என்று கவலைப்பட வேண்டாம். இது அனைவருக்கும் கட்டாயமில்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல, வாட்ஸ்அப்புக்கும் மெட்டா வெரிஃபைட் திட்டம் வந்திருக்கிறது. 

வாட்ஸ்அப் பிளஸ் என்றால் என்ன?: வாட்ஸ்அப் பிளஸ் என்பது சில கூடுதல் தனிப்பட்ட அம்சங்களை விரும்புபவர்களுக்கான சந்தா சேவை. இது அசல் வாட்ஸ்அப்புக்கு பதிலாக வருவது இல்லை; அதற்கு மேலாக சில பிரீமியம் அம்சங்களை தரும் துணைச் சேவை. இது Android, iOS இரண்டிலும் கிடைக்கும். அமைப்புகள் (Settings) மெனுவில் நேரடியாக இதைச் செயல்படுத்தலாம்.

இந்தியாவில் வாட்ஸ்அப் பிளஸ் மாதக் கட்டணம் ரூ.79. முதல் முறையாக சந்தா எடுப்பவர்களுக்கு 1 மாத இலவச சோதனை கிடைக்கும். அந்த காலம் முடிந்த பிறகு சந்தாவை ரத்து செய்யாமல் விட்டால், ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கு அல்லது UPI மூலம் பணம் தானாகவே பிடிக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் சந்தாவை நிறுத்தலாம்; பின்னர் விரும்பினால் மீண்டும் செயல்படுத்தவும் முடியும்.

வாட்ஸ்அப் பிளஸ் சந்தா எடுத்தவர்களுக்கு கிடைக்கும் முக்கிய அம்சங்கள்:

1. செயலியின் கருப்பொருள் (Theme) மாற்றும் வசதி. வாட்ஸ்அப் ஐகானின் நிறத்தையும் உங்கள் விருப்பப்படி மாற்றலாம்.

2. ஒவ்வொரு உரையாடலுக்கும் தனித்தனி ரிங்டோன் அமைக்கலாம். குடும்பம், நண்பர்கள், அலுவலக குழுக்கள் ஆகியவற்றுக்கு வேறு வேறு டோன்கள் வைக்கலாம்.

3. வழக்கமாக 3 உரையாடல்களை மட்டும் பின் செய்ய முடியும்; இப்போது 20 உரையாடல்களை வரை பின் செய்யலாம்.

4. செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட ஈமோஜிகள், சிறப்பு ஸ்டிக்கர் பேக்குகள், தனிப்பயன் அரட்டைப் பட்டியல் வடிவமைப்பு போன்றவை கிடைக்கும். இதனால் அரட்டை அனுபவம் இன்னும் தனிப்பட்டதாக இருக்கும்.

சந்தாவை எப்படிப் பெறுவது?:

1. வாட்ஸ்அப்பைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி Settings-க்கு செல்லவும்.

2. அங்கே Subscription அல்லது WhatsApp Plus என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3. விலை மற்றும் அம்சங்களைப் படித்த பிறகு, 1 மாத இலவச சோதனையைத் தொடங்கும் பட்டனை அழுத்தவும்.

4. உங்கள் பணம் செலுத்தும் முறையை (payment method) சேர்த்ததும் சேவை செயல்படுத்தப்படும். 5. வேண்டுமென்றால் அதே மெனுவில் இருந்து எந்த நேரமும் சந்தாவை ரத்து செய்யலாம்.