மக்களுக்கு அடுத்த ஷாக்..! வரலாறு காணாத அளவில் உயர்வு..!
இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் கட்டணம், ஜூலை 1ல் இருந்து, 500 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை, உயர்த்தப்பட உள்ளது என, வெளியுறவுத்துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 36 பக்க பாஸ்போர்ட் பெறும் கட்டணம், 1,500 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாகவும், 'தட்கல்' கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான கட்டணம், 2,000 ரூபாயிலிருந்து, 3,500 ரூபாயாகவும், 'தட்கல்' கட்டணம் 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
போலீஸ் சான்றிதழ் அல்லது சரண்டர் சான்றிதழுக்கான கட்டணம், 500லிருந்து 750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், சாதாரண கட்டணத்தில் இருந்து, 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்துவிட்டாலோ, அதற்கு மாற்றாக 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டைப் பெறச் சாதாரண முறையில் 5,000 ரூபாயும், தட்கல் முறையில் 7,500 ரூபாயும் கட்டணம் ஆகும். அறுபது பக்கங்களாக இருந்தால் சாதாரண முறையில் 6,000 ரூபாயும், தட்கல் முறையில் 8,500 ரூபாயும் வசூலிக்கப்படும். 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பெரியவர்கள் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் போதும் இதே கட்டண முறையே பொருந்தும்.
மறுபுறம், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன. 36 பக்கங்கள் கொண்ட புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்குச் சாதாரண முறையில் 1,750 ரூபாயும், தட்கல் முறையில் 4250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் பிரிவில், பாஸ்போர்ட் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ மாற்றுப் பாஸ்போர்ட் பெறச் சாதாரண கட்டணமாக 4,250 ரூபாயும், தட்கல் கட்டணமாக 6,750 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இது தவிர, போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் ஒப்படைப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கு ரூபாய் 750ம், அடையாளச் சான்றிதழுக்குச் கட்டணமாக ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.

