மக்களுக்கு அடுத்த ஷாக்..! எலுமிச்சம் பழம் விலை ‘கிடுகிடு’ உயர்வு...!
Sep 3, 2026, 13:25 IST1788422159690
தமிழகம் முழுவதும் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது.இதனால் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சியான மற்றும் இயற்கை பானங்களை அதிகளவில் பருகி வருகிறார்கள். பசுமை நிறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில்கூட கோடை வெயிலுக்கு இணையாக வெயிலின் தாக்கம் உள்ளது.
இவ்வாறு எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையாகி வந்த ஒரு கிலோ எலுமிச்சம் பழம் கடந்த வாரம் ரூ.250 ஆக உயர்ந்தது. அதோடு நிற்காமல் கடந்த 2 நாட்களில் ரூ.30 உயர்ந்து நேற்று ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.

