மக்களுக்கு அடுத்த ஷாக்..! மருந்துகளின் விலை 20% வரை உயர வாய்ப்பு..!

 
1

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தொடர்ந்து 13 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் LNG எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் வணிக கேஸ் சிலிண்டர் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான உணவகங்களில் உணவுப் பட்டியல் குறைக்கப்பட்டுள்ளன. சில உணவகங்கள் மூடியுள்ளன.

எனினும், வணிக கேஸ் சிலிண்டர் விநியோகத்தை சீராக்கும் வகையில் உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தியை அதிகரித்தும், வெளிநாட்டில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

முக்கிய கடல்வழி போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாலும், மருந்துப் பொருட்களை அனுப்பும் செலவும் அதிகரித்துள்ளதாலும் மருந்துப் பொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் விலை சுமார் 10% முதல் 20% வரை மார்ச் மாத இறுதியில் உயரக்கூடும் என்று இந்திய மருத்துத்துறை தொழில் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள், விலையுயர்ந்த மூலப்பொருட்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள உறுதியற்ற தன்மையுடன் தொடர்புடைய அதிகரித்து வரும் தளவாட இடையூறுகள் காரணமாக, மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் மருந்து மற்றும் தொடர்புடைய பொருட்களின் விலைகள் 10-20% வரை அதிகரிக்கக்கூடும் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தக் குறுகிய நீர்வழிப் பாதை, கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு ஏற்றுமதிக்கான உலகின் மிக முக்கியமான வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதியில் ஏற்படும் இடையூறுகள் இப்போது விநியோகச் சங்கிலிகளில் அலைமோதுகின்றன, இது மருந்துப் பொருட்கள் முதல் பேக்கேஜிங் பொருட்கள் வரை அனைத்தையும் பாதிக்கிறது.

அதேபோல் சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் KSMs என்ற மருந்து மூலப்பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் மருந்துகளை நிரப்பப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் விலையும், மாத்திரை பேக்கேஜிங் செலவுகள் அதிகரித்து வருகின்றன. பொருட்களை எடுத்துச் செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்து வரும் எரிபொருளின் விலையேற்றம் மருந்துப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைப் பாதிக்கின்றது. மாற்று வழித்தடத்தில் சரக்கு கப்பல்கள் இயக்கப்படுவதால் செலவினம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மருந்துப் பொருட்களின் விலை 10% முதல் 20% வரை உயர வாய்ப்புள்ளது.