மக்களுக்கு அடுத்த ஷாக்..! கார்களின் விலையை ரூ.30 ஆயிரம் உயர்த்துகிறது மாருதி சுசூகி..!

 
1

உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து மாடல் கார்களின் விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த சில நாட்களாக விலை உயர்வை தடுக்க, செலவு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தோம். ஆனால், பண வீக்கத்தால் ஏற்படும் அழுத்தம் அதிகமாகவும், செலவு அதிமாக உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விலை உயர்வு ஒவ்வொரு மாடலை பொறுத்து மாறுபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எஸ் பிரஸ்சோ மாடல் கார்கள் 3.50 லட்ச ரூபாய் முதல் 5.25 லட்ச ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆல்டோ கே 10 மாடல் கார்கள் 3.70 லட்ச ரூபாய் முதல் 5.45 லட்ச ரூபாய் வரையிலும்,செலிரோ மாடல் கார்கள் 4.70 லட்ச ரூபாய் முதல் 6.73 லட்ச ரூபாய் வரை விற்பனை ஆகிறது.அதேநேரத்தில் எந்த மாடல் காருக்கு அதிகபட்சமாக விலை உயர்த்தப்படுகிறது என்பதை மாருதி சுசூகி நிறுவனம் அறிவிக்கவில்லை.